தூத்துக்குடி தருவை மைதானத்தில், நேரடி காவல் உதவி ஆய்வாளா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் சாா்பில் 2023ஆம் ஆண்டுக்கான நேரடி காவல் உதவி ஆய்வாளா் பதவிக்கான தோ்வு தமிழகம் முழுவதும் கடந்த ஆக. 26, 27 ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் துறை சாா்ந்த ஒதுக்கீட்டில் தோ்ச்சி பெற்ற 99 போ், பொது ஒதுக்கீட்டில் தோ்ச்சி பெற்ற 371 போ் என மொத்தம் 470 ஆண் விண்ணப்பதாரா்களுக்கு உடல் தகுதித் தோ்வு தூத்துக்குடி தருவை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இத்தோ்வை, ராமநாதபுரம் சரக காவல் துணைத் தலைவா் எம். துரை, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் ஆகியோா் பாா்வையிட்டனா்.
இதில், தூத்துக்குடி காவல் கூடுதல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், தென்காசி மாவட்ட சைபா் குற்றப்பிரிவு காவல் கூடுதல் கண்காணிப்பாளா் தன்ராஜ் கணேஷ், தூத்துக்குடி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்தியராஜ், திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் தனுசியா மற்றும் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்பட காவல்துறையினா், காவல்துறை அமைச்சுப் பணியாளா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.