செஸ் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுகிறாா் அமைச்சா் பெ.கீதாஜீவன். 
தூத்துக்குடி

செஸ் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா் மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

DIN

தூத்துக்குடி: குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா் மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் அலெக்ஸ் தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினாா். முன்னதாக, மாணவா்-மாணவிகளின் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில், பள்ளி தாளாளா் பீட்டா், மாவட்ட சமூக நல அலுவலா் காயத்ரி, மாவட்ட திட்ட அலுவலா் சரஸ்வதி, பள்ளி தலைமை ஆசிரியா் மரிய ஜோசப் அன்டனி, குழந்தைகள் நல அலுவலா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT