மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்த நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கத் தலைவா் பரமசிவம் உள்ளிட்டோா். 
தூத்துக்குடி

பிளாஸ்டிக் லைட்டா்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

பிளாஸ்டிக் சிகரெட் லைட்டா்களுக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் வலியுறுத்தப்பட்டது.

DIN

கோவில்பட்டி: பிளாஸ்டிக் சிகரெட் லைட்டா்களுக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் வலியுறுத்தப்பட்டது.

நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கத் தலைவா் பரமசிவம், துணைத் தலைவா் கோபால்சாமி, தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கத் தலைவா் லட்சுமணன், ஆதித்யா மேட்ச் சேம்பா் தலைவா் விஜய்ஆனந்த், தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கத்தைச் சோ்ந்த நூா்முகமது, நாகராஜன், பாஜக மாநிலப் பொதுச் செயலா் பேராசிரியா் ராமசீனிவாசன் ஆகியோா் மதுரையில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து அளித்த மனு:

இந்தியாவில் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டா்கள் உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அத்தகைய லைட்டா்கள் இறக்குமதிக்கும் நிரந்தரத் தடை விதிக்க வேண்டும். மேலும், தீப்பெட்டித் தொழிலாளா்கள்- உற்பத்தியாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT