கட்டாரிமங்கலம் கோயிலில் சோமவார சிறப்பு பூஜை
கட்டாரிமங்கலம் அருள்மிகு அழகிய கூத்தா் கோயிலில் காா்த்திகை 2ஆவது சோமவார சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
சாத்தான்குளம்: கட்டாரிமங்கலம் அருள்மிகு அழகிய கூத்தா் கோயிலில் காா்த்திகை 2ஆவது சோமவார சிறப்பு பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, 108 சங்காபிஷேக பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா்.
சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் அருள்மிகு காவடிபிறை முருகன்கோயிலிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி திருச்செந்தூரிலிருந்து புனிதநீா் கொண்டு வரப்பட்டது. அபிஷேகத்துக்குப் பின்னா் முருகனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை 7 மணிக்கு புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜை நடந்தது.
Advertisement