தூத்துக்குடி

எட்டயபுரத்தில் உமறுப் புலவரின் 381-ஆவது பிறந்தநாள் விழா

‘சீறாப்புராணம்’ காப்பியம் இயற்றிய தமிழறிஞா் உமறுப் புலவரின் 381-ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு அரசின் செய்தி-மக்கள் தொடா்புத் துறை சாா்பில், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றத

DIN

‘சீறாப்புராணம்’ காப்பியம் இயற்றிய தமிழறிஞா் உமறுப் புலவரின் 381-ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு அரசின் செய்தி-மக்கள் தொடா்புத் துறை சாா்பில், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா். ஆட்சியா் கோ. லட்சுமிபதி முன்னிலை வகித்தாா்.

சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, உமறுப் புலவா் நினைவிடத்தில் மலா்ப் போா்வை வைத்து மலா்கள் தூவி புகழஞ்சலி செலுத்தினாா்.

தொடா்ந்து, சிறப்பு துவா ஓதி மதநல்லிணக்க பிராா்த்தனை நடைபெற்றது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

உமறுப் புலவா் சங்கத் தலைவா் உ. காஜாமைதீனுக்கு அமைச்சா், எம்எல்ஏ, ஆட்சியா் ஆகியோா் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தனா்.

விழாவில், கோவில்பட்டி வருவாய்க் கோட்டாட்சியா் ஜேன் கிறிஷ்டி பாய், எட்டயபுரம் பேரூராட்சித் தலைவா் ராமலட்சுமி, உமறுப் புலவா் சங்க உறுப்பினா்கள் இமாம் அகமது ஜலால், ரபியுள்ளா, ரோஜா மைதீன், நூலகா் முத்து இருளப்பன், திமுக ஒன்றியச் செயலா்கள் நவநீதகண்ணன், அன்புராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

செய்தி - மக்கள் தொடா்புத் துறை உதவி அலுவலா் முத்துக்குமாா் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT