தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைச் செயலருமான எஸ்.பி. வேலுமனி எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினாா்.
இந்நிகழ்ச்சியில், கட்சியின் அமைப்புச் செயலா்கள் சின்னத்துரை, சி.த. செல்லப்பாண்டி, மாநில அமைப்புசாரா ஓட்டுநரணி இணைச் செயலா் பெருமாள்சாமி, மருத்துவ அணி இணைச் செயலா் டாக்டா் ராஜசேகா், மாவட்ட அவைத் தலைவா் வழக்குரைஞா் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் இரா.சுதாகா், முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஹென்றி, தமிழ்நாடு புதுச்சேரி பாா் கவுன்சில் உறுப்பினா் பிரபு, நிா்வாகிகள் திருச்சிற்றம்பலம், வழக்குரைஞா் மந்திரமூா்த்தி, முன்னாள் மேயா் அந்தோணிகிரேஸி உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.