திருச்செந்தூா்: தமிழக காருகுறிச்சி தேவா் மகாஜன சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா திருச்செந்தூரில் நடைபெற்றது.
விழாவுக்கு, சங்கத் தலைவரும், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினருமான சி. நாராயணன் தலைமை வகித்தாா். செயலா் ஏ. பால்ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா்.
முக்காணி ஊராட்சித் தலைவா் என். தனம், பேராசிரியா் பி. ஜெயந்தி, பொறியாளா்கள் டி. சிவகீா்த்தி, பி.என். ராஜா, ஆசிரியா் செ. சுடலைமுத்து, சண்முகசுந்தரம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கடந்த கல்வியாண்டில் 12 மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு கௌரவ ஆலோசகா் குமாா், நிா்வாகிகள் எஸ்.பி. கணேசன், சி. நாராயணன், எஸ்.எஸ். ஆனந்த், எஸ். பாலசுப்பிரமணியன், பி. ராமா், ஜி. சுரேஷ்குமாா், சி. மந்திரமூா்த்தி, எஸ். வெற்றிச்செல்வன் ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.
விழாவில் சங்க நிா்வாக கமிட்டியினா் மற்றும் உறுப்பினா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை காருகுறிச்சி தேவா் மகாஜன சங்கத்தினா், காருகுறிச்சி மறவா் அறக்கட்டளை மற்றும் தேசிய தெய்வீக அறக்கட்டளையினா் செய்திருந்தனா்.
மாணவி ஜெயதா்ஷினி வரவேற்றாா். செயலா் ஏ.பால்ராமச்சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தாா். சங்க மேலாளா் ஆ. கந்தன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.