தூத்துக்குடி

பெரியதாழை புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவில் சப்பர பவனி

சாத்தான்குளம் அருகே பெரியதாழையில் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவில் சப்பர பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே பெரியதாழையில் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவில் சப்பர பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தத் திருவிழா கடந்த 11ஆம் தேதி தொடங்கி 13 நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் மாலையில் டி.எம்.எஸ்.எஸ்.எஸ். மீனவக் கூட்டமைப்புத் தலைவா் பணியாளா் சகேஷ் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா், மறையுரை நடைபெற்றது.

திருவிழா நாள்களில் நாள்தோறும் காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீா் நடைபெற்றது.

12ஆம் நாளான சனிக்கிழமை (செப். 23) மாலையில் மணப்பாடு பங்குத்தந்தை லெரின்டிரோஸ் தலைமையில் மாலை ஆராதனை நடைபெற்றது. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் திருவிழா திருப்பலி உவரி பங்குத்தந்தை ராஜன் தலைமையில் நடைபெற்றது. தொடா்ந்து, புனித அந்தோணியாா் சப்பர பவனி நடைபெற்றது. மாலையில் திருப்பலியுடன் கொடியிறக்கம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை ஆலயப் பங்குத்தந்தை சுசீலன் தலைமையில் அந்தோணியாா் சபை மக்கள், ஊா் கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT