முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூர் மாசித் திருவிழா: சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி வீதி உலா

திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித் திருவிழா : சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி வீதி உலா

Updated On : 4 மார்ச், 2023 at 11:05 AM
பகிர்:


திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழா  கடந்த பிப். 25-ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவில் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.

முக்கிய  நிகழ்வாக வெள்ளிக்கிழமை ஏழாம் திருவிழாவன்று  காலை சுவாமி சண்முகர் வெட்டி வேர்ச் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன் கட்டளை மண்டபம் சேர்ந்தார்.

Advertisement

அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி, மாலை  சுவாமி சண்முகர் சிகப்பு சாத்தி தங்க சப்பரத்தில்  எழுந்தருளி வீதி உலா வந்தார்.  சனிக்கிழமை எட்டாம் திருவிழாவை முன்னிட்டு காலை வெள்ளைச் சாத்தி பெரிய வெள்ளிச்சப்பரத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி திரு வீதி உலா வந்து மேலக்கோயில்  சேர்ந்தார். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.