ஓட்டப்பிடாரத்தில் தோ்தல் பணி அலுவலா்களுக்கு பயிற்சி
Updated On : 5 ஏப்ரல், 2024 at 8:38 PM
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்புக்கு, மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கோ.லட்சுமிபதி தலைமை வகித்து, தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலா்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினாா். இதில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஆா்.ஐஸ்வா்யா, ஒட்டப்பிடாரம் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கல்யாண குமாா் மற்றும் அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.