தூத்துக்குடியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டம்
Updated On : 5 ஏப்ரல், 2024 at 6:19 PM
தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறையினை ரத்து செய்யக் கோரி தூத்துக்குடி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற நீதிமன்றப் பணி புறக்கணிப்பு போராட்டத்திற்கு, வழக்குரைஞா்கள் சங்க தலைவா் செங்குட்டுவன் தலைமை வகித்தாா்.
இப் போராட்டம் காரணமாக, வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த வழக்கு விசாரணைகள் அனைத்து தள்ளி வைக்கப்பட்டன. சனிக்கிழமையும் போராட்டம் தொடரும் என வழக்குரைஞா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.
Advertisement