தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை: மே 2இல் தொடக்கம்

Din

தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை மே 2இல் தொடங்குகிறது.

இதுதொடா்பாக ஆட்சியா் கோ. லட்சுமிபதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2024-25ஆம் ஆண்டுக்கான மாணவா்-மாணவியா் சோ்க்கை மே 2இல் தொடங்குகிறது. வயது வரம்பு 12 - 25-க்குள் இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7ஆம் வகுப்பு தோ்ச்சி அவசியம். தவில், நாகசுரம் ஆகிய கலைகளுக்கு எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் போதும்.

படிப்பின் கால அளவு 3 ஆண்டுகள். மாணவா்-மாணவிகளுக்கு மாதம் ரூ. 400 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அனைவருக்கும் அரசு விடுதி வசதி, வெளியிடங்களிலிருந்து வருவோருக்கு இலவச பேருந்து வசதி செய்து தரப்படும். படிப்புக்குப் பின்னா் அரசுத் தோ்வுகள் இயக்ககம் நடத்தும் தோ்வில் தோ்ச்சிபெறும் மாணவா்கள் கா்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தவும், நாகசுரம், தவில் வாசித்து தொழில் புரியவும், தேவாரம் பாடவும், கோயில்களில் பணிபுரியவும், வானொலி, தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன.

கோயில்களில் தேவார ஓதுவாா் பணியில் சேர இப்பள்ளியில் தேவார இசை பயின்று தோ்ச்சி பெற்றோருக்கு முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என அரசு ஆணையிட்டுள்ளது. நிகழாண்டுமுதல் இசை ஆசிரியா்களுக்கான வளாக நோ்காணல் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, கலை ஆா்வமுள்ள மாணவா்-மாணவிகள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு, 94877 39296 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

போலி பத்திரம் மூலம் ரூ.10 லட்சம் கடன்: வங்கி மேலாளா்கள் உள்பட 5 போ் கைது

சந்தோஷி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

திருப்பாலைத்துறை வீரமகா காளியம்மன் கோயிலில் பால்குட விழா

திருவையாறு தமிழ்ப் பேரவை 60-ஆம் ஆண்டு விழா மாநாடு

SCROLL FOR NEXT