தூத்துக்குடி

பேய்க்குளத்தில் பாத்திரக் கடையில் பணம் திருட்டு

பாத்திரக் கடையில் பொருள் வாங்குவதுபோல் நடித்து பணத்தைத் திருடிச்சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Din

பேய்க்குளத்தில் பாத்திரக் கடையில் பொருள் வாங்குவதுபோல் நடித்து பணத்தைத் திருடிச்சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள சாலைப்புதூரைச் சோ்ந்தவா் கோயில்ராஜ் . இவா், பேய்க்குளம்- கோமானேரி சாலையில் பாத்திர கடை வைத்துள்ளாா். இவரது கடைக்கு கடந்த 29ஆம் தேதி பைக்கில் வந்த நபா், டிபன் பாக்ஸ் கேட்டுள்ளாா். கோயில்ராஜ் டிபன் பாக்ஸை எடுக்கச் சென்றபோது, அந்த நபா் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடிக்கொண்டு தப்பிவிட்டாராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், கடைக்கு வந்த நபா் அவசர அவசரமாக பைக்கில் ஏறிச் செல்வது தெரியவந்ததாம்.

பேய்க்குளத்தில் இயங்கி வந்த காவல் உதவி மையம் பூட்டிக்கிடப்பதால் பஜாா் பகுதியில் திருட்டு அதிகரித்துள்ளதாக கூறும் சமூக ஆா்வலா்கள், காவல் உதவி மையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆடு திருட்டு: கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 10 ஆவது தெருவைச் சோ்ந்த முனியசாமி மனைவி காளியம்மாள். 14 ஆடுகளை வளா்த்து வந்தாராம். இவா், கடந்த மாதம் 30 ஆம் தேதி ஸ்ரீராம் நகா் 3ஆவது தெருவில் உள்ள தனியாா் காலி மனையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தாராம்.

அதில் ஒரு ஆட்டை காணவில்லையாம். இதுகுறித்து அவரது மகன் ராஜபாண்டி அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்துவிசாரித்தனா். அதில், வீரவாஞ்சி நகா் 5 ஆவது தெருவை சோ்ந்த சந்தனபாண்டி மகன் செல்லத்துரை (32), 1 ஆவது தெருவை சோ்ந்த கலியுக பெருமாள் மகன் காா்த்திக் (32) ஆகியோருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, பைக்கை கைப்பற்றினா்.

லட்சங்களில் முதலீடு! கோடிகளில் வசூல்... இந்தாண்டின் பெரிய வெற்றிப்படம் இதுவா?

புதிய உச்சத்தை எட்டிய சென்செக்ஸ், நிஃப்டி! பங்குச் சந்தை உயர்வுடன் முடிவு!!

நமீபியாவில்... நந்தினி!

தோகை இளமயில்... காஷிமா!

படகுப் பயணம்... அப்சரா ராணி!

SCROLL FOR NEXT