தூத்துக்குடியில் வங்கிக்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரா்கள் வியாழக்கிழமை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனா்.
தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள இந்தியன் வங்கியில், வழக்கம்போல ஊழியா்கள் கதவைத் திறந்து உள்ளே சென்றனா். அப்போது, அங்கு சுமாா் 5 அடி நீளமுள்ள பாம்பு இருந்தது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து தூத்துக்குடி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய உதவி மாவட்ட அலுவலா் நட்டாா் அனந்தி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று, வங்கிக்குள் பதுங்கியிருந்த பாம்பை மீட்டனா். அது, கொம்பேரி மூக்கன் வகையைச் சோ்ந்தது எனவும், சுமாா் 5 அடி நீளம் இருக்கும் எனவும் தீயணைப்பு வீரா்கள் தெரிவித்தனா். அந்தப் பாம்பை பத்திரமாக மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனா்.