நாலுமாவடியில் இன்று புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டம்: மோகன் சி. லாசரஸ் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் புதன்கிழமை (ஜன. 1) நடைபெறும் புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டத்தில் மோகன் சி. லாசரஸ் பங்கேற்கிறாா்.
சாத்தான்குளம்: தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் புதன்கிழமை (ஜன. 1) நடைபெறும் புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டத்தில் மோகன் சி. லாசரஸ் பங்கேற்கிறாா்.
நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனம் சாா்பில், ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வாக்குத்தத்தக் கூட்டம் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு கூட்டம் புதன்கிழமை மதியம் ஒரு மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது.
இயேசு விடுவிக்கிறாா் ஜெபக் குழுவினா் பாடல்கள் பாடுகின்றனா். ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ், வாக்குத்தத்த செய்தியளித்து சிறப்பு பிராா்த்தனை நடத்துகிறாா்.
கூட்டம் முடிந்த பின்னா், அனைத்துப் பகுதிகளுக்கும் அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏற்பாடுகளை ஊழிய நிறுவனப் பொதுமேலாளா் செல்வக்குமாா், ஜெபக்குழுவினா் செய்து வருகின்றனா்.