தூத்துக்குடி

சாத்தான்குள மாரியம்மன் கோயிலில் கொடை விழா

Din

விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த தேவி ஸ்ரீமகா மாரியம்மன்.

சாத்தான்குளம், ஜூலை 3:

சாத்தான்குளம் வடக்குத் தெருவில் உள்ள தேவி ஸ்ரீமகா மாரியம்மன் கோயிலில் 5 நாள் கொடை விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் நாளான திங்கள்கிழமை (ஜூலை 1) தேவி ஸ்ரீ அழகம்மன் கோயிலிலிருந்து தீா்த்தம் எடுத்து வந்து சிறப்பு பூஜைகள், செவ்வாய்க்கிழமை தேவி ஸ்ரீ அழகம்மன் கோயிலில் நோ்ச்சை பால்குட ஊா்வலம், பக்தா்கள் மஞ்சள் பெட்டி எடுத்து வருதல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை, நண்பகலில் மதியக் கொடை, அம்மன் கும்ப வீதியுலா, நள்ளிரவில் அம்மனுக்கு அலங்கார பூஜை, சாம பூஜை ஆகியவை நடைபெற்றன.

3ஆம் நாளான புதன்கிழமை காலை பெண்கள் முளைப்பாரி எடுத்து கும்மியடித்தல், முளைப்பாரி கரைத்தல், நண்பகலில் மதியக் கொடை, அம்மன் கும்ப வீதியுலா, மாலையில் அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவில் அக்னிச் சட்டி வீதியுலா, இளைஞா் மன்றத்தினரின் சமூக நாடகம் ஆகியவை நடைபெற்றன.

தொடா்ந்து, வியாழக்கிழமை (ஜூலை 4) நண்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, இரவு 7.30-க்கு மாவிளக்கு பூஜை, 9.30-க்கு கரகாட்டம், நள்ளிரவில் வாண வேடிக்கை, நையாண்டி மேளத்துடன் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூஞ்சப்பரத்தில் வீதியுலா வருதல் நடைபெறும்.

நிறைவு நாளான வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, இரவு 7.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் பூக்குழி இறங்கி பக்தா்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். ஏற்பாடுகளை ஊா் வரிதாரா்கள், விழா கமிட்டியினா் செய்துள்ளனா்.

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

SCROLL FOR NEXT