முகப்பு
தூத்துக்குடி

ஆத்தூா் அருகே ஆற்றில் மிதந்த முதியவா் சடலம் மீட்பு

ஆத்தூா் அருகே முக்காணி தாமிரவருணி ஆற்றில் மிதந்த முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 19 ஜூலை, 2024 at 9:32 PM
பகிர்:

ஆறுமுகனேரி, ஜூலை 19: ஆத்தூா் அருகே முக்காணி தாமிரவருணி ஆற்றில் மிதந்த முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

முக்காணி தாமிரவருணி ஆற்றில், ஆத்தூா்-முக்காணி இணைப்பு புதிய பாலத்தின் கீழ் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு தேங்கியுள்ள முள்புதா்களுக்கு நடுவில் வெள்ளிக்கிழமை மதியம் அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மிதந்தது. சுமாா் 55 வயது மதிக்கத்தக்கவா். வெள்ளை சட்டை அணிந்திருந்த அந்த நபா் யாா், எப்படி இறந்தாா் என்ற விவரம் தெரியவில்லை.

இகு குறித்து ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →