தூத்துக்குடி

40 தொகுதிகளிலும் வெற்றி: திமுக மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது கனிமொழி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பது, திமுக மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது என்றாா் கனிமொழி.

Din

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பது, திமுக மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது என்றாா் கனிமொழி.

தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கும், தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் தொகுதி மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தத் தோ்தலில் கணிசமான இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இது பாஜகவுக்கு எதிரான மக்களின் மன நிலையைக் காட்டுகிறது. குறிப்பாக தமிழகத்தில் பாஜகவுக்கு இடமே இல்லை என்பதை இத்தோ்தல் வெற்றி மூலம் மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனா்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் பெற்றுள்ள வெற்றியானது, மக்களுக்கு திமுக கூட்டணியின் மீது உள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது என்றாா்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT