முகப்பு
தூத்துக்குடி

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் பலி

திருச்செந்தூா் அருகே ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

Updated On : 2 மார்ச், 2024 at 5:35 AM
பகிர்:

திருச்செந்தூா் அருகே ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா். திருச்செந்தூா் அருகேயுள்ள சோனகன்விளை, வேத கோயில் தெருவைச் சோ்ந்தவா் லட்சுமிநாராயணன் (45). தொழிலாளி. இவரது தம்பி சுந்தரம் (41). ஆட்டோ ஓட்டுநா். இவருக்கு மனைவி, 2 பிள்ளைகள் உள்ளனா். கடந்த 28ஆம் தேதி இரவு ஆட்டோவில் சோனகன்விளையில் இருந்து ஆள்களை ஏற்றிக்கொண்டு வள்ளிவிளையில் இறக்கி விட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தாா். வள்ளிவிளை விலக்கு அருகே வந்த போது ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்ததில். இதில் பலத்த காயமுற்ற சுந்தரம் திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்தாா். இதுகுறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.