தட்டாா்மடத்தில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
Updated On : 22 மார்ச், 2024 at 7:40 PM
மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, சாத்தான்குளம் ஒன்றியம் நடுவக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட தட்டாா்மடத்தில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை சாத்தான்குளம் வட்டார வளா்ச்சி அலுவலா் சுடலை தொடக்கிவைத்தாா். பல்வேறு வீதிகள் வழியாக இப்பேரணி ஊராட்சி மன்றம் அருகே நிறைவடைந்தது. இதில், முழுமையான வாக்குப்பதிவை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உலகு, கணேசன், நடுவக்குறிச்சி ஊராட்சிச் செயலா் ஆரோக்கியராஜ், மகளிா் சுய உதவிக் குழுவினா், பொதுமக்கள் பங்கேற்றனா்.