வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து மண்டல அலுவலா்களுக்கு பயிற்சி
Updated On : 30 மார்ச், 2024 at 6:36 PM
வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த மண்டல அலுவலா்களுக்கான செயல்விளக்க பயிற்சி முகாம் திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமிற்கு கோட்டாட்சியா் சுகுமாறன் தலைமை வகித்து ஆலோசனைகளை வழங்கினாா். திருச்செந்தூா் வட்டாட்சியா் அ.பாலசுந்தரம், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் கோபாலகிருஷ்ணன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திருச்செந்தூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வட்டார வளா்ச்சி அலுவலா்கள், துணை அலுவலா்கள், நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.