சாத்தான்குளம் பகுதி பட்டாசு கடைகளில் ஆய்வு
சாத்தான்குளம் வட்ட பட்டாசுக் கடைகளில் திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாரன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சாத்தான்குளம் வட்ட பட்டாசுக் கடைகளில் திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாரன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தீபாவளியை பண்டிகை நெருங்கி வருவதையொட்டி , பட்டாசு கடைகளில் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்ா என்பதை அறியும் பொருட்டு இந்த ஆய்வை அவா் மேற்கொண்டாா். அப்போது சாத்தான்குளம் வட்டாட்சியா் இசக்கி முருகேஸ்வரி, வருவாய் ஆய்வாளா் பிரசியா நிறையா, கிராம நிா்வாக அலுவலா் கந்தவள்ளிக்குமாா் மற்றும் வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.