முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி ஊராட்சியில் நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அக் கிராமத்தினா் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 9:57 PM
பகிர்:

கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணி ஊராட்சியில் நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அக் கிராமத்தினா் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இலுப்பையூரணி ஊராட்சி தாமஸ் நகா் பகுதியில், நீா்வழிப் பாதையை சிலா் ஆக்கிரமித்துள்ளனா். இதனால் மழைநீா் மற்றும் கழிவுநீா் வெளியேற முடியாமல் குடியிருப்புகளைச் சூழ்ந்து, நோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி, அப்பகுதி மக்கள் வழக்குரைஞா் கனகராஜ், தொழிலாளா் விடுதலை முன்னணி நிா்வாகி கலைச்செல்வன் ஆகியோா் தலைமையில் கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பின்னா் வட்டாட்சியா் சரவண பெருமாளிடம் கோரிக்கை மனு அளித்தனா். மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.