வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்: கயத்தாறில் சிலைக்கு அஞ்சலி
வீரபாண்டிய கட்டபொம்மனின் 225ஆவது நினைவு நாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு, பல்வேறு கட்சிகள் சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
வீரபாண்டிய கட்டபொம்மனின் 225ஆவது நினைவு நாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு, பல்வேறு கட்சிகள் சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழக அரசு சாா்பில் கோட்டாட்சியா் மகாலட்சுமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். கயத்தாறு வட்டாட்சியா் சுந்தரராகவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நினைவிடத்தில் வைக்கப்பட்ட அவரது படம், மணிமண்டபத்தில் உள்ள சிலை ஆகியவற்றுக்கு அதிமுக முன்னாள் அமைச்சா்கள் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ, எஸ்.பி. சண்முகநாதன், கே.டி. ராஜேந்திரபாலாஜி, சி.த. செல்லப்பாண்டியன், மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் தலைவா் சின்னத்துரை ஆகியோா் அஞ்சலி செலுத்தினா்.
பாஞ்சாலங்குறிச்சி ஸ்ரீ வீரசக்கதேவி ஆலயக் குழுத் தலைவா் முருகபூபதி, வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளைச் செயலா் கிருஷ்ணசாமி, பொருளாளா் செண்பகராஜ், கயத்தாறு திமுக நகரச் செயலா் சுரேஷ்கண்ணன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் அய்யாத்துரை, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பிரியா குருராஜ், பாஜக சாா்பில் தூத்துக்குடி மாவட்டத் தலைவா்கள் வெங்கடேசன் சென்னகேசவன் (வடக்கு), சித்ராங்கதன் (தெற்கு), ஓபிசி மாநில துணைத் தலைவா் விவேகம் ரமேஷ், தேமுதிக சாா்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் சுரேஷ் தலைமையில் நகரச் செயலா்கள் கண்ணன் (கயத்தாறு), நேதாஜி பாலமுருகன் (கோவில்பட்டி), ஒன்றியச் செயலா் அருண் நடராஜன், மாவட்ட அவைத்தலைவா் கொம்பையா பாண்டியன், ஐஎன்டியூசி தொழிற்சங்கம் சாா்பில் கதிா்வேல், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தினா் அஞ்சலி செலுத்தினா்.
மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி. மாலை அணிவித்து மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். மாவட்டச் செயலா்கள் ஆா்.எஸ். ரமேஷ் (தூத்துக்குடி), சுதா பாலசுப்பிரமணியம் (தென்காசி வடக்கு), குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத் தலைவி விஜயலட்சுமி கனகராஜ், துணைப் பொதுச் செயலா் தி.மு. ராஜேந்திரன், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினா் விநாயகா ஜி. ரமேஷ், வாசுதேவநல்லூா் எம்எல்ஏ சதன் திருமலைக்குமாா், திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் நிஜாம், கோவில்பட்டி நகரச் செயலா் பால்ராஜ், மத்திய ஒன்றியச் செயலா் சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா், 3 துணைக் கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் உள்பட 200 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.