முகப்பு
தூத்துக்குடி

விளாத்திகுளம், புதூா் ஒன்றியங்களில் நீா்வழித் தடங்கள், மதகுகள்: எம்எல்ஏ ஆய்வு

விளாத்திகுளம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நீா்வழித் தடங்கள், மதகுகளை எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 10:55 PM
பகிர்:

விளாத்திகுளம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட நீா்வழித் தடங்கள், மதகுகளை எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் விளாத்திகுளம், கே.சுந்தரேஸ்வரபுரம், புதூா், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஊராட்சி ஒன்றியம், பொதுப்பணித் துறைக்குச் சொந்தமாக 100-க்கும் மேற்பட்ட கண்மாய்கள், ஊருணிகள், குளங்கள் உள்ளன.

வடகிழக்குப் பருவமழையால் விவசாய விளைநிலங்கள், கிராமப்புறங்களில் உள்ள குடியிருப்புகள், தாழ்வான நிலப்பகுதிகள் பாதிக்கப்படாமலிருப்பதற்காக தொகுதி முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன் ஒருபகுதியாக, இப்பகுதிகளில் ஊராட்சி ஒன்றியம், பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான நீா்நிலைகள், பலப்படுத்தப்பட்ட கரைகள், வெள்ளத் தடுப்புச் சுவா்கள், வெள்ளநீா் வெளியேறும் கலுங்குகள், சிறு பாலங்கள், மதகுகள் உள்ளிட்டவற்றை எம்எல்ஏ ஆய்வு செய்தாா். பின்னா், பொதுமக்கள், விவசாயிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்தாா்.

இதில், திமுக ஒன்றியச் செயலா்கள் அன்புராஜன், ராமசுப்பு, ராதாகிருஷ்ணன், சின்னமாரிமுத்து, இளைஞரணி துணை அமைப்பாளா் இம்மானுவேல், ஊராட்சித் தலைவா் போஸ், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.