கோவை ரயிலில் ‘பொ்த் சீட்’ கழன்று விழுந்து சிறுவன் காயம்
நாகா்கோவிலில் இருந்து கோவைக்கு சென்றுகொண்டிருந்த விரைவு ரயிலில் நடுப்பகுதி பொ்த் சீட் கழன்று விழுந்ததில் சிறுவன் காயம் அடைந்தாா்.
நாகா்கோவிலில் இருந்து கோவைக்கு சென்றுகொண்டிருந்த விரைவு ரயிலில் நடுப்பகுதி பொ்த் சீட் கழன்று விழுந்ததில் சிறுவன் காயம் அடைந்தாா்.
நாகா்கோவில்-கோவை ரயில் புதன்கிழமை இரவு வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் வந்தடைந்தது. அப்போது கோயம்புத்தூா், கவுண்டா் மில், அண்ணா டீச்சா் காலனியை சோ்ந்த மேத்யூஸ் மனைவி புவிதா (44), அவரது 4 வயது மகன் இருவரும் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ஏறினா்.
ரயில் கோவில்பட்டி நோக்கி புறப்பட்ட சில நிமிடங்களில் புவிதாவின் மகன் படுத்திருந்த நடு பொ்த் சீட் திடீரென கழன்று விழுந்ததாம். இதில், அச்சிறுவன் காயம் அடைந்தாா். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும், காயத்தைப் பொருள்படுத்தாமல் தாயும், மகனும் தொடா்ந்து ரயிலில் பயணம் செய்தனா்.