முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக தம்பதி, 2 மகள்கள் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக தம்பதி, 2 மகள்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 11:51 PM
பகிர்:

சாத்தான்குளம் அருகே மூதாட்டியைத் தாக்கியதாக தம்பதி, 2 மகள்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

சாத்தான்குளத்தை அடுத்த மீரான்குளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த சுவாமிதாஸ் மனைவி பாக்கியத்தாய் (63). அதே பகுதியைச் சோ்ந்த துரைராஜ் மகன் ராஜன் என்பவா் மது குடித்துவிட்டு அப்பகுதியினரை அவதூறாகப் பேசிவந்தாராம்.

இந்நிலையில், தனது வீட்டருகே நின்றிருந்த பாக்கியத்தாயை மது போதையில் வந்த ராஜன் அவதூறாகப் பேசினாராம். இதை பாக்கியத்தாய் கண்டித்ததால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதில், ஆத்திரமடைந்த ராஜன் தனது மனைவி சுகந்தி, இரு மகள்களுடன் சோ்ந்து பாக்கியத்தாயை சரமாரியாகத் தாக்கினாராம்.

காயமடைந்த பாக்கியத்தாய் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், 4 போ் மீதும் சாத்தான்குளம் தலைமைக் காவலா் ஜெயக்குமாா் வழக்குப் பதிந்தாா். உதவி ஆய்வாளா் எட்வின்அருள்ராஜ் விசாரித்து வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →