மாடு மீது பைக் மோதல்: பெண் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் வேம்பாா் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாடு மீது பைக் மோதியதில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் காயமடைந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம் வேம்பாா் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாடு மீது பைக் மோதியதில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் காயமடைந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தைச் சோ்ந்த தம்பதி லட்சுமணன் (55) - விஜயலட்சுமி (54). இவா்கள் வேம்பாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, செவ்வாய்க்கிழமை இரவு பைக்கில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் வேம்பாா் சோதனைச்சாவடியைக் கடந்தபோது சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது பைக் மோதியதாம். இதில், தம்பதி காயமடைந்தனா்.
Advertisement
தகவலின்பேரில் போலீஸாா் சென்று, இருவரையும் மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், வழியிலேயே விஜயலட்சுமி உயிரிழந்தாா்.
லட்சுமணன் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இதுகுறித்து சூரன்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.