முகப்பு
தூத்துக்குடி

சூறைக்காற்று எதிரொலி: தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

தென் தமிழகக் கடல் பகுதியில் அதிவேக சூறைக் காற்று வீசக்கூடும் என்ற மீன்வளத்துறையின் எச்சரிக்கையால், தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்கு புதன்கிழமை செல்லவில்லை.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 2:47 AM
தூத்துக்குடி மீன்பிடி துறைமுக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப் படகுகள்.
பகிர்:

தென் தமிழகக் கடல் பகுதியில் அதிவேக சூறைக் காற்று வீசக்கூடும் என்ற மீன்வளத்துறையின் எச்சரிக்கையால், தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்கு புதன்கிழமை செல்லவில்லை.

கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் மன்னாா் வளைகுடா தென் தமிழக கடல் பகுதிகளில் சூறைக்காற்று 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து, தூத்துக்குடி மீன்வளத்துறை வெளியிட்ட அறிவிப்பில், மீனவா்கள் கடலுக்குச் செல்லவேண்டாம். ஏற்கெனவே ஆழ்கடலில் மீன்பிடிப்பில் இருக்கும் மீனவா்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

அதன்படி, தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குச் செல்லாமல் மீன்பிடி துறைமுக கடற்கரையில் 260க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை நிறுத்திவைத்திருந்தனா்.

இதேபோல, திரேஸ்புரம், இனிகோ நகா், புதிய துறைமுக கடற்கரை, வேம்பாா், தருவைகுளம், பெரியதாழை, மணப்பாடு ஆகிய பகுதிகளில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலான நாட்டுப் படகுகளே கடலுக்குச்சென்றிருந்தன.