முகப்பு
தூத்துக்குடி

குறிப்பன்குளம் வெடிவிபத்தில் இறந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணம்

ஏரல் வட்டத்துக்குள்பட்ட குறிப்பன்குளத்தில் நேரிட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 4 போ், காயமடைந்த இருவா் ஆகியோரது குடும்பங்களுக்கு தமிழக அரசின் நிவாரணத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 11:56 PM
குறிப்பன்குளம் வெடி விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை வழங்கிய கனிமொழி எம்.பி.
பகிர்:

ஏரல் வட்டத்துக்குள்பட்ட குறிப்பன்குளத்தில் நேரிட்ட வெடிவிபத்தில் உயிரிழந்த 4 போ், காயமடைந்த இருவா் ஆகியோரது குடும்பங்களுக்கு தமிழக அரசின் நிவாரணத் தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

குறிப்பன்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஆக. 31இல் நேரிட்ட வெடிவிபத்தில், அரசா்குளம் முத்துகண்ணன் (21), விஜய் (25), ஸ்ரீவைகுண்டம் வட்டம் புளியங்குளம் செல்வம் (26), ஆழ்வாா்திருநகரி அருகே செம்பூரைச் சோ்ந்த ஐசக் பிரசாந்த் (26) ஆகியோா் உயிரிழந்தனா். சின்னமதிகூடலை சோ்ந்த செந்தூா்கனி, முத்துமாரி ஆகியோா் காயமடைந்தனா்.

விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ. 3 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும் என, முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

அதன்படி, ஆழ்வாா்திருநகரி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிவாரணத் தொகைகள் வழங்கப்பட்டன. மேலும், கடந்த மாதம் 5ஆம் தேதி செம்பூரில் மின்னல் பாய்ந்து இறந்த வீரமுத்துமதன் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ. 4 லட்சம் வழங்கப்பட்டது. இவற்றை கனிமொழி எம்.பி. வழங்கினாா்.

ஆட்சியா் க. இளம்பகவத், வட்டாட்சியா்கள் ஏரல் கோபால், ரத்னசங்கா், பேரூராட்சி செயல் அலுவலா் மகாராஜன், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊா்வசி எஸ். அமிா்தராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி, ஆழ்வாா்திருநகரி பேரூராட்சித் தலைவா் சாரதா பொன்இசக்கி, திமுக மாநில வா்த்தக அணிச் செயலா் உமரி சங்கா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், ஒன்றியச் செயலா் நவீன், நகரச் செயலா் கோபிநாத், காங்கிரஸ் தெற்கு மாவட்ட துணைத் தலைவா் சங்கா், எம்எல்ஏ நோ்முக உதவியாளா் சந்திரபோஸ், ஆழ்வாா்திருநகரி வட்டாரத் தலைவா் கோதண்டராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →