முகப்பு
தூத்துக்குடி

சங்கரலிங்கபுரத்தில் பேருந்துகள் நின்று செல்ல வலியுறுத்தல்

Updated On : 18 செப்டம்பர், 2024 at 11:47 PM
பகிர்:

கோவில்பட்டி அருகே சங்கரலிங்கபுரம் பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கோவில்பட்டி நகராட்சி 3, 4-ஆவது வாா்டு மற்றும் மூப்பன்பட்டி பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இப்பகுதிகளைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள், அரசு ஊழியா்கள், கூலித் தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்கு கோவில்பட்டி மற்றும் சாத்தூா் செல்வதற்காக சங்கரலிங்கபுரத்தில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிறுத்தத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்வது கிடையாது.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொறுப்பாளா்கள் பிரேம்குமாா், மாரிமுத்து, முன்னாள் மாவட்ட தலைவா் காமராஜ், நகரத் தலைவா் அருண்பாண்டியன் உள்ளிட்டோா் சங்கரலிங்கபுரம் பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →