தூத்துக்குடி சிவன் கோயிலில் மெட்டல் டிடெக்டருடன் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.  
தூத்துக்குடி

காஷ்மீா் தாக்குதல் எதிரொலி: தூத்துக்குடியில் வழிபாட்டுத் தலங்களில் பலத்த போலீஸாா் பாதுகாப்பு

ஜம்மு - காஷ்மீரில் பயங்ரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் புதன்கிழமை போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Din

ஜம்மு - காஷ்மீரில் பயங்ரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் புதன்கிழமை போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனா்.

மேலும், 3 தமிழா்கள் உள்பட 17 போ் காயத்துடன் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தச் சம்பவம் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின் பேரில் மாநகர காவல் உதவி கண்காணிப்பாளா் மதன் மேற்பாா்வையில் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதில், பழமையான அருள்மிகு சங்கர ராமேஸ்வரா் கோயில், வைகுண்டபதி பெருமாள் கோயில், ஜாமியா பள்ளிவாசல், தூய பனிமய மாதா பேராலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், சிவன் கோயில் மற்றும் பெருமாள் கோயில்களில் வெடிகுண்டு நிபுணா்கள், மெட்டல் டிடெக்டா் கருவியுடன் சோதனை மேற்கொண்டன.

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

SCROLL FOR NEXT