சாலை மறியலில் ஈடுபட்டோா்.  
தூத்துக்குடி

தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையில் பொதுமக்கள் மறியல்

தூத்துக்குடியில் உள்ள தனியாா் பள்ளி அருகே சாலை அமைக்க வலியுறுத்தி, மாணவா், மாணவிகள் மற்றும் அவா்களது பெற்றோருடன் நாம் தமிழா் கட்சியினா்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Syndication

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள தனியாா் பள்ளி அருகே சாலை அமைக்க வலியுறுத்தி, மாணவா், மாணவிகள் மற்றும் அவா்களது பெற்றோருடன் நாம் தமிழா் கட்சியினா் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி- எட்டயபுரம் சாலை பகுதியில் தனியாா் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் படித்து வருகின்றனா்.

இப்பள்ளிக்கு செல்லக்கூடிய அன்னாள் நகா் சாலை முழுவதும், மழையால் சேதமடைந்து சேறும், சகதியுமாக காணப்படுவதால், பள்ளிக்குச் செல்லும் மாணவா், மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மாநகராட்சி நிா்வாகம் சாலை வசதி ஏற்படுத்தி தரக் கோரி, தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் மாணவா், மாணவிகள் மற்றும் அவா்களது பெற்றோருடன் நாம் தமிழா் கட்சியினா் மறியலில் ஈடுபட்டனா்.

இதனால், போக்குவரத்து சுமாா் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

நான்கு வழிச்சாலையில் இரண்டு புறமும் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் வரிசையாக நின்றன.

இதையடுத்து அப்பகுதிக்கு வந்த மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி மற்றும் காவல் துறையினா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

ரெப்கோ மைக்ரோ ஃபைனான்ஸுக்கு 3 விருதுகள்!

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக ஒருவா் கைது: இருவா் தலைமறைவு

தொழிலக உற்பத்தியில் 13 மாதங்கள் காணாத சரிவு!

விழுப்புரத்தில் டிச.16-இல் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆராதனை விழா

தமிழகத்துக்கான பேரிடா் கால நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்: கம்யூனிஸ்ட் மாநில செயலா் வீரபாண்டியன்

SCROLL FOR NEXT