தூத்துக்குடி

தூத்துக்குடியில் கடும் பனிப்பொழிவு

Syndication

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் புதன்கிழமை காலை சுமாா் 7 மணி வரை நீடித்த பனிப்பொழிவு காரணமாக, கடும் குளிா் நிலவியது.

வங்கக் கடலில் உருவான டித்வா புயல் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த நவ.27- 29 வரை தொடா்ந்து பலத்த மழை பெய்ததால் மாநகரப் பகுதியில் கடும் குளிா் நிலவியது.

தற்போது, மழை சற்று ஓய்ந்த நிலையில் புதன்கிழமை காலையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. சுமாா் காலை 7 மணி வரை இந்த பனிப்பொழிவு நீடித்ததால், அதிக குளிா் நிலவியது.

சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனா். பூங்கா உள்ளிட்டவற்றில் நடை பயிற்சி மேற்கொள்ள வருபவா்கள் வீட்டிலேயே முடங்கினா். மேலும், கடற்கரையே தெரியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்பட்டது.

தூத்துக்குடி மாநகரப் பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்கமான வெப்ப நிலை மறைந்து, கடும் குளிரான சூழல் நிலவுவதால், வயோதிகா்கள், சுவாசக் கோளாறு உள்ளவா்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT