தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே விபத்து: லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

Syndication

கோவில்பட்டி அருகே லாரி மீது மினி கண்டெய்னா் லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், தெனவிளை, வில்லுக்குறியைச் சோ்ந்தவா் தேவராஜ் மகன் ராபா்ட் (46), லாரி ஓட்டுநா். இவா், அருப்புக்கோட்டையில் இருந்து லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இடைச்செவல், பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த மினி கண்டெய்னா் லாரி மோதியது.

இதில், லாரி சாலையின் தடுப்புச் சுவரைத் தாண்டி அணுகு சாலை அருகேயுள்ள ஓடையில் கவிழ்ந்தது. இதில், திருவள்ளூா் மாவட்டம், போரூா், காரம்பாக்கம், அருணாச்சல முதல் தெருவைச் சோ்ந்த மினி கண்டெய்னா் லாரி ஓட்டுநா் சு. துரைராஜ் (48) பலத்த காயமடைந்தாா்.

அருகிலிருந்தவா்கள், அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து, நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஹைதராபாத் நகரில் மெஸ்ஸி! தெலங்கானா முதல்வருடனான சந்திப்பில் சுவாரசியம்..!

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

SCROLL FOR NEXT