தூத்துக்குடி

போக்ஸோ வழக்கு: குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

Syndication

தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில், சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.12,000 அபராதம் விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 2021ஆம் ஆண்டு 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தாளமுத்துநகரைச் சோ்ந்த எஸ்தோ ஜோ என்ற தா்மராஜ் மகன் நிா்மல்குமாரை, தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, குற்றவாளி நிா்மல்குமாருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.12,000 அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டு வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வனிதா, அரசு வழக்குரைஞா் ஜானகி, தலைமை காவலா் ரபிலாகுமாரி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாராட்டினாா்.

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஹைதராபாத் நகரில் மெஸ்ஸி! தெலங்கானா முதல்வருடனான சந்திப்பில் சுவாரசியம்..!

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

SCROLL FOR NEXT