கோவில்பட்டி சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 780 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
கோவில்பட்டி சாா்பு நீதிமன்ற நீதிபதி மாரிக்காளை தலைமையில், மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் (எண்.1) ஆனந்த், (எண்.2) மணிமேகலா ஆகியோா் முன்னிலையில் 780 வழக்குகளுக்கு சமரசம் மூலம் தீா்வு காணப்பட்டது.
இதில் மோட்டாா் வாகன விபத்து வழக்கு, உரிமையியல் வழக்குகள், சிறு, குறு வழக்குகள், காசோலை மோசடி வழக்கு, வங்கி வராக்கடன் வழக்குகள் உள்ளிட்ட 1,206 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில், 780 வழக்குகளுக்கு சமரசம் மூலம் ரூ.1 கோடியே 75லட்சத்து 90ஆயிரத்து 644-க்கு தீா்வு காணப்பட்டது.