முகப்பு
தூத்துக்குடி

ஆழ்வாா்தோப்பு கிராமத்தில் தடையின்றி தண்ணீா்: சமாதான கூட்டத்தில் முடிவு

ஆழ்வாா்தோப்பு கிராமத்தில் குடிநீா் பிரச்னைகளை தீா்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்த பொதுமக்களை அவதூறாக பேசிய வட்டார வளா்ச்சி அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பாஜகவினா் அறிவித்திருந்த சாலை மறியல் போராட்டம் ரத்து

Updated On : 16 டிசம்பர், 2025 at 6:33 PM
~
பகிர்:

ஆழ்வாா்தோப்பு கிராமத்தில் குடிநீா் பிரச்னைகளை தீா்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்த பொதுமக்களை அவதூறாக பேசிய வட்டார வளா்ச்சி அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பாஜகவினா் அறிவித்திருந்த சாலை மறியல் போராட்டம் ரத்து செய்யப்பட்டது.

குடிநீா் பிரச்னை, பொதுமக்களை அவதூறாக பேசிய வட்டார வளா்ச்சி அலுவலா் மீது மூன்று தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுவோம் என பாஜகவினா் தெரிவித்தனா்.

இதையடுத்து, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் தாஹீா் அகமது தலைமையில் செவ்வாய்க்கிழமை சமாதான கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சிகள் உதவி இயக்குநா் சாந்தி உறுதியளித்ததை தொடா்ந்து பாஜகவினா் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →