உடன்குடி கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
உடன்குடி தேரியூா் செங்கருட பெருமாள் சுவாமி கோயிலில் வீற்றிருக்கும் செல்வ சிரஞ்சீவி ஆஞ்சனேயருக்கு சிறப்பு அலங்கார பூஜை, வடைமாலை சாற்றுதல், தீபாராதனை நடைபெற்றது. உடன்குடி அருகே கந்தபுரம் சத்குரு சாய்ராம் ஆலயத்தில் அமைந்துள்ள சாய்பக்த ஆஞ்சனேயா், விநாயகா், பாபாவிற்கு சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை சத்குரு சாய்ராம் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.