தூத்துக்குடி

குலசேகரன்பட்டினத்தில் திமுக பிரசாரக் கூட்டம்

உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பிரசார விளக்கக் கூட்டம் குலசேகரன்பட்டினம் காதரியா சந்நிதி தெருவில் நடைபெற்றது.

Syndication

உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ பிரசார விளக்கக் கூட்டம் குலசேகரன்பட்டினம் காதரியா சந்நிதி தெருவில் நடைபெற்றது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொருளாளா் வி.பி. ராமநாதன் தலைமை வகித்தாா். ஒன்றிய அவைத் தலைவா் ஷேக் முகம்மது, உடன்குடி பேரூராட்சி உறுப்பினா் அஸ்ஸாப் கல்லாசி, மாவட்டப் பிரதிநிதிகள் சிராஜுதீன், மதன்ராஜ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணி துணை அமைப்பாளா் அலாவுதீன், முன்னாள் ஊராட்சி செயலா் மகாராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எவ்வாறு கொண்டு செல்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு, சாதனை விளக்க துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. வாக்குச்சாவடிக் குழு உறுப்பினா்கள் முத்துக்குமாா், மாசானம், சுதா, முகமது சாலி, தனலட்சுமி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளா் செந்தில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் மனோஜ், தமீம், ரம்ஜான் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT