உடன்குடி சந்தையடியூா் ‘தாகம் தணிந்த பதி’ என்றழைக்கப்படும் ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயிலில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இங்கு காா்த்திகை மாத திருஏடு வாசிப்பு கடந்த 5ஆம் தேதி தொடங்கியது. சந்தையடியூா் திருஏடு வாசிப்பாளா்கள் ஜெயக்குமாா், ராஜன், சாமித்தோப்பு ஜீவா ஆகியோா் திருஏடு வாசித்தனா்.
வெள்ளிக்கிழமை இரவு திருவிளக்கு வழிபாடு, திருக்கல்யாண ஏடு வாசிப்பு, வீடுகளிலிருந்து இனிப்புகள் செய்து அய்யாவுக்கு படைத்தல், அன்னதா்மம் வழங்கல் ஆகியவை நடைபெற்றன. ஏற்பாடுகளை சந்தையடியூா் அய்யாவழி மக்கள் செய்திருந்தனா்.