நூறு நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து, தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில், கண்டன ஆா்ப்பாட்டம் சாத்தான்குளத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பழையபேருந்து நிலையம் காமராஜா் சிலை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் எம்எல்ஏ தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா்.
இதில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் து.சங்கா், மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் சக்திவேல்முருகன், நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் க.வேணுகோபால் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினா் சுரேஷ், வட்டார தலைவா்கள் பாா்த்தசாரதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.