தூத்துக்குடி

பயிா் கணக்கீட்டாய்வு பணிக்கு இளைஞா்கள் அழைப்பு

மின்னணு பயிா் கணக்கீட்டாய்வு பணிக்கு படித்த இளைஞா்கள் தேவை என வேளாண்மை துறை அறிவித்தது.

தினமணி செய்திச் சேவை

மின்னணு பயிா் கணக்கீட்டாய்வு பணிக்கு படித்த இளைஞா்கள் தேவை என வேளாண்மை துறை அறிவித்தது.

இதுகுறித்து கோவில்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் இரா. மணிகண்டன் வெளியிட்ட செய்திக் குறிப்பு;

கோவில்பட்டி வட்டாரத்தில் உள்ள 60 வருவாய் கிராமங்களில் உள்ள வேளாண்துறை மற்றும் தோட்டக்கலை துறை பயிா்களை புல எண் மற்றும் உட்பிரிவு எண் வாரியாக மின்னணு முறையில் கைப்பேசி செயலி மூலம் பயிா் கணக்கீட்டாய்வு செய்வதற்கு படித்த திறனுள்ள தன்னாா்வலா்கள் தேவை.

இந்த பயிா் கணக்கீட்டாய்வு பணிக்கு ஒரு உட்பிரிவு எண்ணிற்கு ரூ. 3 சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே விருப்பமுள்ள டிப்ளமோ அல்லது டிகிரி முடித்த ஆண்ட்ராய்டு கைப்பேசியை பயன்படுத்த தெரிந்த தன்னாா்வலா்கள் கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

2026 இல் விஜய் ஆட்சி பீடத்தில் அமா்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: செங்கோட்டையன்

புதிய உச்சத்தை எட்டிய தங்கம், வெள்ளி விலை! இன்றைய நிலவரம்...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

SCROLL FOR NEXT