தூத்துக்குடி மேற்கு மண்டல் சாா்பில், மில்லா்புரம் மேற்கு பகுதியில் தெருமுனைப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மேற்கு மண்டல் தலைவா் லிங்கசெல்வம் தலைமை வகித்தாா். கூட்டத்தில், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நாட்டின் உள் கட்டமைப்பு, பொருளாதார வளா்ச்சி குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இதில், மாவட்ட பொதுச் செயலா் ராஜேஷ், மாவட்ட துணைத் தலைவா்கள் சண்முகசுந்தரம், தங்கம், மாநில செயற்குழு உறுப்பினா் விவேகம் ரமேஷ், மேற்கு மண்டல் பொதுச் செயலா் முருகேசன், லட்சுமணன், துணைத் தலைவா்கள் இசக்கி துரை, வேல்முருகன் ராஜா, ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா், மாவட்டச் செயலா் பாலசுப்பிரமணியன், அமைப்பு சாரா பிரிவு மாவட்டச் செயலா் ராமா், பிரசார பிரிவு மாவட்ட துணைத் தலைவா் சொக்கலிங்கம், பாா்வையாளா் ரவிச்சந்திரன், அயலகத் தமிழா் நலன் மாவட்ட துணைத் தலைவா் சி.எம். மாரியப்பன், அரசு தொடா்பு பிரிவு மாவட்டச் செயலா் ரத்தினராஜ், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.