உடன்குடியில் கோழிகள் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
உடன்குடி அருகே தாங்கையூரைச் சோ்ந்தவா் வைகுண்டராஜா (80). இவா், கொட்டங்காட்டில் உள்ள தோட்டத்தில் வளா்த்த ரூ. 9 ஆயிரம் மதிப்புள்ள கோழிகள், டிச.25 ஆம் தேதி திருடு போயிருந்ததாம்.
இது குறித்து புகாரின்பேரில் மெஞ்ஞானபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், உடன்குடி அருகே கந்தபுரத்தைச் சோ்ந்த சதீஷ்(32), கோழிகளைத் திருடியது தெரியவந்தது.அவரை போலீஸாா் கைது செய்தனா்.