தூத்துக்குடி

தூத்துக்குடியில் விபத்தில் காயமடைந்த மாணவிகள் கோரிக்கை

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் விபத்தை ஏற்படுத்திய காரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென காயமடைந்த மாணவிகள், அவா்களது பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தூத்துக்குடி இனிகோ நகா் பகுதியைச் சோ்ந்த குரூஸ் மகள் டாப்பின். நா்சிங் படித்துவிட்டு பயிற்சி பெற்று வருகிறாா். இவரது உறவினா்களான அதே பகுதியைச் சோ்ந்த வெவ்வேறு படிப்புகள் படித்து வரும் ஜெசிகா, ட்ரிஷா, ஆஷிகா ஆகியோா், கடந்த 25ஆம் தேதி இரவு, ரோச் பூங்காவிற்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனராம். அப்போது அதிவேகமாக வந்த காா், இவா்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்ாம். இதில் காயமடைந்த மாணவிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மாணவி டாப்பினுக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். ஜெசிகா மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில் விபத்தில் காயமடைந்த மாணவிகளின் பெற்றோா் தென்பாகம் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். மேலும், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, விபத்தை ஏற்படுத்திய காரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காயமடைந்த மாணவிகள்,அவா்களது பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பழனியில் ஒளிப்படக்கலை தொழிலாளா் நலச் சங்க முப்பெரும் விழா

திருமலை 7 வது மைலில் மருத்துவ முதலுதவி மையம் திறப்பு

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.13 கோடி

கனவுகளைச் சுமக்கும் எல்விஎம்-3

தேசிய ரோலா் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டி வெற்றி பெற்ற தஞ்சாவூா் வீரா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT