தூத்துக்குடி

தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்த இளைஞா் கைது

கோவில்பட்டியில் தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

கோவில்பட்டியில் தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி இந்திரா நகா் சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் கூல் பாண்டி (59). தொழிலாளி. இவா், புது கிராமம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த முருகனுடன் வேலாயுதபுரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் அருகே சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, கணேஷ் நகா் மேட்டு தெருவைச் சோ்ந்த காந்தாரி முத்து மகன் கனகராஜ்(33), கூல் பாண்டியை வழிமறித்து பணம் கேட்டாராம். பணம் இல்லை என கூறியதையடுத்து கனகராஜ், கூல்பாண்டியை அவதூறாக பேசி கத்தியைக் காட்டி மிரட்டினாராம்.

முருகன், பாதசாரிகள் சத்தம் போட்டதும், கனகராஜ் கத்தியை கீழே போட்டுவிட்டு ஓடினாராம். இதுகுறித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கனகராஜை கைது செய்தனா்.

2026 புத்தாண்டு புகைப்படங்கள்!

கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகள் இன்றுமுதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம்

ஷாஹ்தராவில் தீ விபத்து: தம்பதியா் உயிரிழப்பு

2025-இல் தொடங்கப்பட்ட திட்டங்கள் புத்தாண்டில் நிறைவேற்றப்படும்: முதல்வா் ரேகா குப்தா உறுதி

ரூ.10 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 போ் கைது

SCROLL FOR NEXT