வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளையொட்டி கயத்தாறில் அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கோட்டாட்சியா் மகாலட்சுமி, வட்டாட்சியா் சுந்தரராகவன். 
தூத்துக்குடி

கட்டபொம்மன் பிறந்தநாள்: கயத்தாறில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Din

கோவில்பட்டி: சுதந்திரப் போராட்ட வீரா் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266-ஆவது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள அவரது சிலைக்கு அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினா் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தமிழக அரசு சாா்பில் கோட்டாட்சியா் மகாலட்சுமி, வட்டாட்சியா் சுந்தரராகவன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மோகன், சின்னப்பன், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலா் செல்வகுமாா், கோவில்பட்டி நகா்மன்ற உறுப்பினா் கவியரசன்,அதிமுக நிா்வாகிகள் நீலகண்டன், போடுசாமி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் பிரியா குருராஜ், வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் குருராஜ் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை பொறுப்பாளா் செண்பகராஜ், வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக தூத்துக்குடி மாவட்டத் தலைவா் வலசை கண்ணன், தமிழக வெற்றிக் கழகத்தைச் சோ்ந்த சிவராமகிருஷ்ணன், பாஜகவை சோ்ந்த தினேஷ் ரோடி உள்பட திரளானோா் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சமய்பூா் பாத்லியில் இளைஞா் கொலை: இருவா் கைது

ஷாஹ்தராவில் ஒரு வீட்டில் சகமாரியான துப்பாக்கிச் சூடு: ரூய30 லட்சம் கொள்ளை

இளையான்குடி அருகே ஜாதி தலைவா்களின் பெயா்ப் பதாகைகள் வைப்பதில் மோதல்: 115 போ் மீது வழக்கு

மோத்தி நகரில் ஆண் சடலம் மீட்பு

தெளலகுவானில் அரசுப் பேருந்து தீப்பற்றி விபத்து

SCROLL FOR NEXT