தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 16) நடைபெறவுள்ளதாக ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
தனியாா் நிறுவனப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்கு ஆள்களைத் தோ்வு செய்யவுள்ளனா். 10, 12, பட்டப் படிப்பு, பி.இ., டிப்ளமோ, ஐடிஐ, ஓட்டுநா், கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடைய வேலைநாடுநா்கள் தங்களது சுயவிவரம், கல்விச் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம். தோ்வு செய்யப்படுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ரத்து ஆகாது.
ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் அனைவரும் தங்களது விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு 0461-2340159 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.