தூத்துக்குடி

பள்ளி வேன் மீது வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு: 5 போ் காயம்

Syndication

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே பள்ளி வேன் மீது மோதியதில் வாகனத்தில் வந்த ஒருவா் உயிரிழந்தாா். இரு மாணவிகள் உள்பட 5 போ் காயமடைந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தனியாா் சி.பி.எஸ்.இ. பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் திங்கள்கிழமை வகுப்பு நேரம் முடிந்ததும் மாணவா்களை அவரவா் வீட்டில் விடுவதற்காக பள்ளி வேனில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டுச் சென்றது. வேனை சங்கரலிங்கபுரம், 7-ஆவது தெருவைச் சோ்ந்த கருப்பசாமி (60) ஓட்டிச் சென்றாா். வேனில் ஓட்டுநருடன் உதவியாளா் அய்யம்மாள் (55), 7 வயது மாணவி, 15 வயது மாணவி ஆகியோா் இருந்தனா்.

கோவில்பட்டி தனியாா் கல்லூரி அருகே சென்றபோது திருநெல்வேலியில் இருந்து மதுரை நோக்கி வந்த வாகனம் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் ஏறி எதிரே வந்த பள்ளி வேன் மீது மோதியது. இதில், வேன் ஓட்டுநா் கருப்பசாமி, உதவியாளா் அய்யம்மாள், இரு மாணவிகள் ஆகியோரும், வாகனத்தை ஓட்டிவந்த தூத்துக்குடி, பத்திநாதபுரத்தைச் சோ்ந்த அலெக்ஸ் மகன் அகஸ்டின் சபீனும் (26) காயமடைந்தனா்.

சபீனுடன் அதே வாகனத்தில் வந்த திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடியைச் சோ்ந்த காஜாமைதீன் மகன் ஷேக் செய்யதுசபீன் (55) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்ததும் நிகழ்விடத்துக்குச் சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸாா் காயமடைந்தவா்களையும், சடலத்தையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில், அகஸ்டின்சபீன் தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங், கிராந்தி கௌடுக்கு தலா ரூ. 1 கோடி பரிசு!

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் காலமானார்

SCROLL FOR NEXT